மறைக்கப்பட்ட நாடார் வரலாறு|Nadars History|Paul Backer

Share
Embed
 • Published on:  Friday, December 20, 2019
 • நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி,லிங்காயத் சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்கள் ஆவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

  நாடார்களின் தோற்றம் குறித்த தொன்மக்கதை, தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைப் பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களிலிருந்தே நாடார் சமூகம் தோன்றியதாகவும் சொல்கிறது. இதன் அடிப்படையில் நாடார்களைப் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைப்பது உண்டு. நாடார்களின் தோற்றம் குறித்துப் பலர் ஆராய்ந்து அறிய முயன்றும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. . குறிப்பாக நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலர் நாடர்கள் முன்னர் உயர் நிலையில் இருந்தவர்கள் என்றும், அவர்களின் தோற்றம் அரச குலத்தவரோடு தொடர்புடையது என்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்[சான்று தேவை]. மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனவும் அவர்கள் கூறினர். மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது.

  நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர்கள் கருதினர். பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.

  இச்சமுதாயத்தினரைக் குறிக்கும் சாணார், நாடார் போன்ற சொற்கள் சான்றார், சான்றோர், நாடாள்வார் ஆகிய சொற்களில் இருந்து மருவியவை போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய நம்பகமான ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லை.கால்டுவெல் குறிப்பிட்டது போல் நாடார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், பதனீர் இறக்குபவர்கள் மட்டுமன்றி அவர்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும் இருந்தனர்.

  இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.

  அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்கள் பங்களிக்கின்றனர். நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் தமிழக முதல்வராகப் பணியாற்றி தமிழக முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர். இன்றைக்கு பல கிளைகளோடு வங்கியாகச் செயல்பட்டுவருகிற "தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க்" நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்று. சங்க அமைப்புகள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்கள் வெளிநாடுகளான இலங்கை, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்.

  #நாடார் #Nadars #History

Comment